42 தொகுதிகளிலும் 40% பெண் வேட்பாளர்களை நிறுத்தும் மம்தா

கோல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரி ணாமூல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடும் 100% வேட்பாளர்களில் 40% போட்டியாளர்களைப் பெண் களாகப் போட்டியிட வைத்துள்ளது.
இந்தப் போட்டியில் சினிமா நட் சத்திரங்களும் குதிக்கின்றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை ஆட்சி புரிந்துவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அங்குள்ள 42 தொகுதி களிலும் எந்தக் கட்சியுடனும் கைகோக்காமல் தனித்தே போட்டி யிடுகிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளி யிட்ட பின்னர் செய்தியாளர் களிடம் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய எம்பிக்கள் ஐவர் போட்டியிடவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக உள்ள ஜாதவ்பூர் எம்பி சுகதா போஸ் தேர்தலில் போட்டியிட அந்தப் பல்கலைக்கழகம் அனுமதி தரவில்லை.
உடல் நலக்குறைவு காரணமாக சந்தியா ராயும், கட்சிப் பணியாற்று வதற்காக மூத்த தலைவர்கள் சுப்ரதா பக்‌‌ஷியும் உமா சோரனும் தேர்தலில் நிற்கவில்லை.
இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி 40.5% பெண் வேட்பாளர் களை நிறுத்துகிறது. இது பெண் களுக்குப் பெருமைமிக்க தருணம்.
இந்தத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடு கிறார்கள். தற்போதைய எம்பிக்கள் மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் (தீபக் அதிகாரி) ஆகி யோர் மீண்டும் போட்டியிடு கின்றனர்.
முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதிக்கு மீண்டும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்த லுக்குப் பிந்தைய கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து தொகுதிகளிலும் அசாமில் ஆறு தொகுதிகளிலும் பீகாரில் இரு தொகுதிகளிலும் அந்தமானில் உள்ள ஒரு இடத்திலும் போட்டி யிடுகிறோம்.
மின்னணு வாக்கு இயந்திரங் களில் மோசடிகள் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
தனக்கு எதிராக நடிகை மூன் மூன் சென்னை மம்தா நிறுத்தி இருப்பது குறித்து மத்திய அமைச் சர் பாபுல் சுப்ரியோ டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.
"எப்போதுமே எனக்கு எதிராக மம்தா பரபரப்பான வேட்பாளர் களையே நிறுத்துகிறார். கடந்த தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர் தோலா சென்னை நிறுத்தினார். இம்முறை நடிகை மூன்மூன் சென்னை நிறுத்தியுள்ளார்," என பாபுல் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!