90% பாஜக எம்பிக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை

புதுடெல்லி: 268 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 பேருக்கு வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தராது என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு வாய்ப்பு தந்தால் வெற்றி எண்ணிக்கை பாதிக்கப்படும் என்று கட்சி அஞ்சுகிறது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டுமானால் இதைச் செய்தாகவேண்டும் எனவும் பாஜக உறுதி கொண்டுள்ளது. 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பில் அமித்ஷா மிகவும் கறாராக இருக்கிறாராம். இப்போதுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30% வேட்பாளர்களை புறக்கணிக்க கட்சி தீர்மானித்துள்ளது. போட்டியிடுவதற் கான வாய்ப்பு மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்றும் கூறியுள்ளனர் விவரம் அறிந்தவர்கள். 
நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர் என்றெல் லாம் கூறிக்கொண்டு யாரும் இனி வாய்ப்பு கேட்கமுடியாது. யாராக இருந்தாலும் வெற்றிபெற மாட்டார் எனக் கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இவர்களே மீண்டும் போட்டியிடுவதைவிட புதுமுகம் யாராவது போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் எனவும் கட்சி கருதுகிறது.