காணொளி பார்த்து குழந்தை பெறமுயன்ற தாய்-சேய் பலி

கோரக்பூர்: கோரக்பூரில் படித்து வந்த இளம்பெண் ஒருவர் தனக்கு திருமணம் ஆகாமலேயே குழந்தை கருத்தரித்திருந்த நிலையில் அதைப் பெற்றெடுக்க மருத்துவ மனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே யாருடைய உதவியும் நாடாமல் கைபேசியில் உள்ள காணொளியைப் பார்த்தே குழந்தையைப் பெற்றெடுக்க முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சி பயன் தராமல் தாயும் சேயும் பலியாகி உள்ளனர்.   
உத்தரப்பிரதேசத்தின் பஹ் ரைன் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் மேற்          படிப்பிற்காக கடந்த 4 ஆண்டு களுக்கு முன் கோரக்பூருக்குச் சென்றுள்ளார். அவர் அங்குள்ள பிலாந்த்பூர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார். 
இந்நிலையில், அவரது அறைக் கதவு வழியே ரத்தம் வழிந்தோடி வெளியேறியுள்ளது.  
இதனைக் கவனித்த மற்ற குடியிருப்பாளர்கள் அளித்த தக வலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
கதவை உடைத்துப் பார்த்ததில் இளம்பெண்ணும் அவரது குழந் தையும் ரத்தம் வழிந்தோட இறந்து கிடந்தது தெரியவந்தது.  
“திருமணம் ஆகாத அந்தப் பெண் கைபேசி காணொளியைப் பார்த்து, தனது குழந்தையைப் பெற்றெடுக்க  முயற்சி செய்தபோது  தாய்-சேய் இருவரும் பலியாகி உள்ளனர்.
“அவரது குடும்பத்தினர் புகார் எதுவும் இதுவரை அளிக்க வில்லை.  அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற விவரத்தினையும் இளம்பெண் ணின் பெற்றோர் வெளியிட வில்லை,” எனப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon