90% பாஜக எம்பிக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை

புதுடெல்லி: 268 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 பேர் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தராது போலிருக்கிறது. இவர்களுக்கு ‛சீட்' தந்தால், வெற்றி எண்ணிக்கை பாதிக்கப்படும் என்று கட்சி அஞ்சுகிறது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டுமானால் இதை செய்தாக வேண்டும் எனப் பா.ஜ., திட்டமிடுகிறது.
இப்போதுள்ள பா.ஜ., நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30 விழுக்காடு பேரை புறக்கணிக்க கட்சி எண்ணி உள்ளது. சீட் மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர்'' என்றெல்லாம் கூறிக்கொண்டு யாரும் இனி சீட் கேட்க முடியாதாம். யாராக இருந்தாலும் வெற்றி பெற மாட்டார் எனக் கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிடச் சீட் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மோடி பிரதமர் ஆக வேண்டுமானால் இந்த 160 பேரில் பலர் மீண்டும் போட்டியிடக் கூடாது என்றும் இவர்களே மீண்டும் போட்டியிடுவதை விடப் புதுமுகம் யாராவது போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புக் கிடைக்கும் எனக் கட்சி கருதுகிறதாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பில் அமித்ஷா ரொம்ப கறாராக இருக்கிறாராம். கட்சி நடத்திய ஆய்வில் நல்ல 'மார்க்' வாங்காதவர்களுக்கு மீண்டும் சீட் இல்லையாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!