சரத் பவார்: பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக முடியாது 

மும்பை: மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றலாம். இருப்பினும் அதற்கு பெரும்பான்மை கிடைக் காது என்று கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மீண்டும் மோடி பிரதமராக வரமாட்டார் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், எனது கணிப்பின்படி பாஜக மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக இருக்குமே தவிர, ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பை நாடும். அவ்வாறு ஆட்சியமைத் தால் மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.