சுடச் சுடச் செய்திகள்

விமானக் கட்டணம் உயர்வு

சென்னை: போயிங் 737 மேக்ஸ் வகை விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டு விமானப் பயணக் கட் டணங்கள் 20% முதல் 25% வரை உயர்ந்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் 157 பேர் மாண்டனர். போயிங் 737 மேக்ஸ் 8 என்னும் அந்த விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் இந்தோ னீசியாவிலும் இதே வகை விமா னம் திடீரென கீழே விழுந்ததில் ஏராளமான பயணிகள் உயிரிழந் தனர்.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் விமானங்க ளுக்கு ஒவ்வொரு நாடாகத் தடை விதித்து வருகின்றன. இந்தியாவில் அந்த வகை விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று முன் தினம் மாலை முதல் நடப்புக்கு வந் தது. இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரு விமான நிறுவனங்கள்தான் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை அதிகள வில் இயக்கி வந்தன. அவற்றில் ஒரு பகுதி நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்டன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்றும் 35 விமா னங்களின் சேவையை நிறுத்திவிட் டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon