பயங்கரவாதம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வுக்கு அமெரிக்கா தோள் கொடுக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதுடெல்லி சென்றுள்ள அமெ ரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்திய வெளி யுறவுச் செயலாளர் விஜய் கோக லேயை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு போல்டன் வெளி யிட்ட டுவிட்டர் பதிவில், “அமெ ரிக்க-இந்திய உத்திபூர்வப் பங் காளித்துவ முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் இந்தோ-பசிபிக் வட்டாரம் மீதான கருத் தைப் பகிர்ந்து கொள்ளவும் இந் திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்துப் பேசினேன்.