மசூத் அஸாரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸாரை கறுப்புப் பட்டிய லில் சேர்த்து ஆயுதத் தடை, பயணத் தடை விதிப்பதற்கு ஐநா பாதுகாப்பு மன்றத்தில் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா நான்காவது முறையாக முட்டுக் கட்டை போட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு இந்திய விமானத்தைக் கடத்திய தீவிர வாதிகளின் நிபந்தனைகளை ஏற்று இந்திய சிறையில் இருந்து அப் போதைய பாஜக அரசால் விடு விக்கப்பட்ட மசூத் அஸார், தற் போது பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் காஷ்மீரின் புல் வாமா பகுதியில் 40 சிஆர்பிஎஃப் படையினர் உயிரைப் பறித்த தற் கொலை கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் மசூத் அஸார் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், அஸாரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை நிறுத்திவைக்க சீனா கோரியுள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஐநா பாதுகாப்பு மன்றத்துக்
கான சீன தூதுக்குழு இத் தீர் மானத்தின் மீது, 'தொழில் நுட்ப காரணங்களுக்காக நிறுத்திவைக் கும்' வாய்ப்பைப் பயன்படுத்தி உள்ளதாகவும் அச்செய்தி நிறு வனம் குறிப்பிட்டது. இதற்கு இந் தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் மசூத் அஸார் மீது தடை கொண்டு வர 2016, 2017ஆம் ஆண்டுகளில் இந்தியா முயற்சி எடுத்தபோதும் சீனா தடுத்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!