சுடச் சுடச் செய்திகள்

தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அதிமுகவுக்கே இரட்டை இலை

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி மன்றம் இரட்டை இலை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மனுவை அது தள்ளுபடி செய்திருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் டிடிவி தினகரன், சசி கலா தரப்பில் மேல்முறையீடு செய் யப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவ சரம் கருதி இந்த மனுவை விசார ணைக்கு எடுத்துக்கொள்ள வேண் டும் என்று தலைமை நீதிபதியிடம் மனுதாரர்கள் சார்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். 
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துவிட்டது. அதேவே ளையில், குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon