24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம் சிங்-மாயாவதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 24 ஆண்டுகளுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.  இதுவரை சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கைக் கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி,  இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக் கிறார்.
இந்தத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. 
அவரை ஆதரித்து மாயாவதி நாளை மறுதினம் 19ஆம் தேதி மைன்புரியில் பிரசாரம் மேற் கொள்கிறார். மேலும், முலாயம் சிங்குக்கு கட்சி தொண்டர்கள் உரிய கவுரவம் அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள் ளார். பகுஜன் சமாஜ் கட்சி சுவ ரொட்டிகளில் கன்சிராமுக்கு இணையாக முலாயம்சிங் படமும் இடம்பெற வேண்டும் என்றும்  அவர்  உத்தரவிட்டுள்ளார்.  
மாயாவதியும் முலாயம் சிங் கின் மகன் அகிலேஷ் யாதவும் 11 இடங்களில் ஒன்றாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.