நக்கீரன் கோபாலை கைது செய்ய போலிஸ் தீவிரம்

கோவை: தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளை யில், பொள்ளாச்சி பாலியல் விவ காரம் அரசியலில் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 
 அந்த விவகாரத்தை அம் பலப்படுத்தி காணொளிகளுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழ் கோபாலை கைதுசெய்ய போலிஸ் தீவிரமாக இருப்பதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பில் மத்திய குற்றப்பிரிவு போலிசில் முன்னிலை யாகும்படி நக்கீரன் கோபாலுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. 
அந்த உத்தரவை ஏற்று கோபால் சார்பில் அவருடைய வழக்கறிஞர் முன்னிலையாகி பல விளக்கங் களை அளித்தார். 
பொள்ளாச்சி பாலியல் விவ காரத்தில் அந்தப் பகுதியின் அதி முக பெரும் புள்ளியான பொள் ளாச்சி ஜெயராமன் போலிசிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை கைதுசெய்ய போலிசார் தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக இருக்கும் பொள் ளாச்சி ஜெயராமனின் குடும்பத் தினரையும் பொள்ளாச்சி விவ காரம் தொடர்பில் விசாரிக்கவேண் டும் என்றும் ஜெயராமனின் புதல் வரான பிரவீன் என்பவருக்கு இந்தப் பாலியல் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஜெயராமனின் மகன் பிரவீன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகத் தெரியவந்தது. 
பொள்ளாச்சி பாலியல் விவ காரத்தில் ஜெயராமன் குடும்பத் திற்குத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவதற்குப் பதி லாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்பவர் மீதும் நவீன் குமார் என்பவர் மீதும் பொள்ளாச்சி ஜெயராமன் அவதூறு வழக்குத் தொடுத்து இருக்கிறார். 
இந்தப் பாலியல் விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு உள்ள திருநாவுக்கரசர் என்பவரை சிபிசிஐடி போலிசார் நான்கு நாள் காவலில் வைத்து விசாரித்து வரு கிறார்கள்.  அவருடைய வீட்டில் மடிக்கணினி முதலான பலவும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகளை அழித்துவிடும் படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதி இருக்கிறது.  
பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை தொடர்பாக மேலும் பலர் புகார் தெரிவித்து வருவதாக வும் சிபிசிஐடி போலிசார் நேற்று தெரிவித்தனர்.
இந்தப் பாலியல் விவகாரம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடைப்பட்ட அரசியல் போராக ஆகிவிட்டது என்றும் தெரிகிறது. 
பொள்ளாச்சி கொடூரத்தில் ஆளும் கட்சி தரப்பினருக்குத் தொடர்பு இருக்கிறது என்று திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும் தெரிவித்து வருகின்றன. 
திமுக புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் பற்றி முதல்வர் எடப்பாடி இன்னமும் வாய் திறக்காமல் இருக்கிறார். 
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு உடனடி தீர்வு தேவை என்று கேட்டு மாணவர்களும் அரசியல் கட்சி களும்   வழக்கறிஞர்களும் விவ சாயிகளும் திருச்சியில் போராட் டத்தில் குதித்ததை அடுத்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகி இருக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்