பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த கார்: 11 பேர் மரணம்

ஜம்மு: காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு சனிக் கிழமை காலை 14 பேருடன் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 
ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்ட போது சற்றும் எதிர்பாராத வித மாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந் தது. 
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.