கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிரம்

கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிரம்

1 mins read

பனாஜி: கோவா முதல்வர் மனோ கர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரு கிறார். அவரது உடல்நிலை மோச மாகி வருவதால் மாற்று முதல் வரை நியமிக்க பாஜக முயன்று வருகிறது. இந் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு காங் கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) சந்திரகாந்த் காவ்லேகர் ஆளுநருக்கு அளித்த அந்தக் கடிதத்தில், "பாஜக தலைமையிலான கூட்டணி அரசு சிறுபான்மையாக உள்ளது. அதன் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. "இதனால், பாஜக ஆட்சியை ரத்து செய்துவிட்டு மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் இருக் கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.