சுடச் சுடச் செய்திகள்

வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தலின் முதற்கட்ட வாக்குப் பதி வுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை தொடங்கு கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அட்ட வணையை தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இம் மாதம் 10ஆம் தேதி வெளியிட் டார். நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதி களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. 
ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை இந்தத் தேர் தல் நடக்கிறது.
ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடை பெறவுள்ளது.
ஆந்திரா - 25, அருணாசல பிரதேசம்-2, பீகார்-4, சட்டீஸ் கர்-1, ஜம்மு-காஷ்மீர்-2, மகாராஷ் ட்ரா-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடி சா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரப் பிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கா ளம்-2, அந்தமான் நிக்கோபார் தீவுகள்-1, லட்சத்தீவுகள்-1 ஆகி யவற்றுக்கு ஏப்ரல் 11ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்த முதற்கட்ட தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 25ஆம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை 26ஆம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற மார்ச் 28ஆம் தேதி கடைசி நாள்.
இந்நிலையில் வாக்குப் பதி வுக்கு 48 நேரத்திற்கு முன்னர் எந்தவோர் அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“மக்கள் பிரதிநிதித்துவச் சட் டம் 126ன்படி இந்த தடைக்காலத் தில் எந்தக் கட்சியும் தேர்தல் அறிக் கையை வெளியிடக்கூடாது.  தடைக்காலம் என்பது மக்கள் அமைதியான மனநிலையில் இருந்து முடிவு எடுக்க நேரம் ஒதுக்கப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon