சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

இந்து, இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த பெண்கள் இருவர் தங்கள் கணவர்களைக் காப்பாற்றுவதற் காக தங்களது சிறுநீரகங்களை மாற்றி தானம் செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் நதீம், 51. சிறுநீரக கோளாற்றால் பாதிக்கப் பட்ட நதீமுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரக சுத்தி கரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
சிறுநீரகம் செயலிழந்து போவதைத் தவிர்க்க அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதற் காக அவர் மும்பையில் உள்ள சய்ஃபி மருத்துவமனையில் சேர்ந்தார்.
இதேபோல பீகாரைச் சேர்ந்த 53 வயது ராம்ஸ்வரத் யாதவ் என்பவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது மனைவி சத்ய தேவி அவரைக் கவனித்து வந்தார்.
நதீமுக்கும் அவரது மனைவி நஸ்ரின் பட்டேலும் ராம்ஸ்வரத் துக்கு அவரது மனைவி சத்ய தேவியும் சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் அவர்களுக்குள் ரத்தப் பிரிவு ஒத்துப்போகவில்லை. 
சிறுநீரகத்தைத் தானம் செய்ய அவர்களது சொந்த பந்தங்கள் யாரும் முன்வரவும் இல்லை.
அப்போதுதான் சய்ஃபி மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவப் பிரிவின் தலைவரான டாக்டர் ஹேமல் ஷா, சிறுநீரகங் களை மாற்றி ஒருவர் மற்றொரு வருக்குத் தானம் செய்வது குறித்த யோசனையை முன் வைத்தார்.
நதீமுக்கு சத்யதேவியின் ரத்தப் பிரிவும் ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரினின் ரத்தப் பிரிவும் ஒத்துப் போனது. இதனால் நதீமுக்கு சத்யதேவியும் ராம்ஸ்வரத்துக்கு நஸ்ரினும் சிறுநீரகத்தைத் தானம் கொடுக்கலாம் என்று டாக்டர் ஷா ஆலோசனை வழங்கினர்.
இது தொடர்பான முதல் கலந் துரையாடலைத் தொடர்ந்து ஒரு மாதம் கழித்து சிறுநீரக மாற்று தானத்தை ஏற்க இரு குடும்பத் தினரும் சம்மதித்தனர். அதன்படி அந்தப் பெண்கள் ஒருவர் மற்றொ ருவரின் கணவருக்கு சிறுநீர கத்தைத் தானமாக வழங்கினர். இதையடுத்து உலக சிறுநீரக தின மான இம்மாதம் 14ஆம் தேதி இரு வருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது.