புதுடெல்லி: சீனாவை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது. மலோகம் எனும் அந்த ஊரில் உள்ள மற்ற அனைவரும் வேறு வாக்குச்சாவடிகளில் தங்களது பெயர்களை பதிவுசெய்துவிட்ட நிலையில், தயாங் என்ற பெண் மட்டும் மறுத்துவிட்டார். இதையடுத்து, சரியான சாலை வசதி இல்லாததால் அதிகாரிகளே எல்லாப் பொருட்களையும் சுமந்து சென்று வாக்குச்சாவடி அமைக்க வேண்டிய நிலை. அங்கு ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
ஒரே ஒருவருக்காக வாக்குச்சாவடி
1 mins read

