இந்தியாவில் 2,300 கட்சிகள்

புதுடெல்லி: இம்மாதம் 10ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முதல்நாள் வரை 2,293 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இந்தியாவில் இருப்பதாகத் தேர்தல் ஆணையப் புள்ளிவிவரம் கூறுகிறது. அவற்றுள் அங்கீகாரம் பெற்ற ஏழு தேசிய கட்சிகளும் 59 மாநிலக் கட்சிகளும் அடங்கும். கடந்த பிப்ரவரியில் இருந்து மட்டும் 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றவே இப்படிப் பெயருக்குக் கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அவை செயல் படாத கட்சிகளாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.