சுடச் சுடச் செய்திகள்

இன்றே இறுதி நாள்: கடனைத் திருப்பிச் செலுத்தாவிடில் அனில் அம்பானிக்குச் சிறை

மும்பை: எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடி வருகிறார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி.
கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கான கெடு இன்றுடன் முடி வடைகிறது. அதனால் இன்றைக் குள் அனில் அம்பானி அத்தொகை யைத் திருப்பிச் செலுத்தாவிடில் சிறையில் அடைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக ரிலையன்ஸ் கம் யூனிகேஷன்ஸ் நிறுவனம், எரிக் சன் நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றுள்ளது. இதில் குறைந்த தொகையை மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திருப்பிச் செலுத்திவிட்டது. 
இதையடுத்து, கடன் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி, எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 
வழக்கு விசாரணை முடிவில், எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையைத் திரும்பிச் செலுத் தாத அனில் அம்பானி உள்ளிட்ட மூவரைக் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
அத்துடன், கடன் நிலுவைத் தொகையான ரூ.462 கோடியை நான்கு வாரங்களுக்குள் அனில் அம்பானி திருப்பித் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மூன்று மாதத் சிறைத் தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், அந்த அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் இன்னும் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 
கடன் தொகையைத் திருப்பி செலுத்தாத பட்சத்தில் அனில் அம்பானியின் சொத்துக்கள் முடக் கப்படுவதோடு, அவரும் சிறை செல்ல நேரிடலாம். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon