சுடச் சுடச் செய்திகள்

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்

பனாஜி: மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் நல்லுடல் நேற்று மாலையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.
ஓராண்டு காலத்திற்கும் மேல் கணையப் புற்றுநோயால் பாதிக் கப்பட்ட திரு மனோகர் பாரிக்கர், 63, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். 
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பட்டம் பெற்று, சட்டமன்ற உறுப்பினரான முதல் இந்தியர் எனும் பெருமைக்குரிய திரு பாரிக்கர், நான்கு முறை கோவா முதல்வராக இருந்தார். இடையில் மூன்றாண்டு காலம் பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தற்காப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
இவர் தற்காப்புத் துறை அமைச்சராக இருந்தபோது காஷ் மீரின் உரி பகுதியில்  ஜெய்ஷ்- இ-முகம்மது அமைப்பு பயங்கர வாதத் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 18 வீரர்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் கட்டுப்பாடில் இருக்கும் காஷ்மீரில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி, பயங் கரவாதிகளைக் கொன்றொழித்து, பெரும் நாசத்தை விளைவித்தது. 
எளிமையான முதல்வராக அறியப்பட்ட இவரின் மனைவியும் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப் பிடத்தக்கது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon