வரதட்சணை கொடுக்காததால் புதுப்பெண் பலாத்காரம்

வரதட்சணை கொடுக்காததால் புதுப்பெண் பலாத்காரம்

1 mins read

லக்னோ: இந்தியாவில் வரதட்சணை கேட்டு ஆண் வீட்டார் பெண்வீட்டாரை பிழிந்தெடுப்பது இன்னும் குறைந்தபாடில்லை. ஒரு பெண் தனது திரு மணத்தின்போது கொடுக்க வேண்டிய வரதட்சணையை முறைப்படி கொடுக்காததால் அவரைத் திருமணநாளின் இரவில் தனது தம்பியுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மணமகன். பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ள இச் சம்பவம் தொடர்பில், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று மகளிர் அமைப்புகள் போராட் டத்தில் குதித்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகரைச் சேர்ந்த பெண்ணுக்குக் கடந்த 6ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது மணப்பெண் வீட்டா ரிடம் மாப்பிள்ளை வீட்டார் திடீரென்று கூடுதலாக வர தட்சணை கேட்டதால் பெண் வீட்டாரால் அதை வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், தனது தம்பியுடன் சேர்ந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காலையில் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பெண் வீட்டார் மீட்டு, மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து இளம்பெண்ணின் கணவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர்.