பனாஜி: கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார். பிரமோத் சாவந்துக்கு ராஜ் பவனில் ஆளுநர் மிருதுளா சின் ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 45 வயதாகும் அவர் இருமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். பிரமோத் சாவந்த் செய்தியாளர் களிடம் கூறுகையில், "கட்சி எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளது. சிறந்த முறை யில் அதைச் செயல்படுத்த நான் முயற்சிப்பேன்," என்றார். இளங்கலை ஆயுர்வேத மருத் துவர் பட்டம் பெற்றுள்ள பிரமோத் சாவந்த், 45, சமூகப் பணியிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது மனைவி சுலக்ஷனா, கோவா மாநில பாஜக மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார். புதிய முதல்வருக் கான தேர்வில் கடந்த சில மாதங் களாகவே பிரமோத் சாவந்த் பெயர் பரிசீலனையில் இருந்துவந்தது.
கோவா முதல்வராக சாவந்த் பதவியேற்பு
1 mins read

