இரு மனைவிகளைப் பார்த்துக்கொள்ள பணம் அச்சடித்த கதாசிரியர்

மும்பை: திரைப்படக் கதாசிரியர் ஒருவரை மும்பை நகர குற்றப் பிரிவு சோலிசார் நேற்று கைது செய்தனர். இவர் போலியான பணத்தை அச்சிட்டு நாடெங்கும் புழக்கத்தில் விட்டதாகக் கூறப் படுகிறது. இதுபோல் அவர் 15 லட்சம் ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளார். 
கதாசிரியருக்கு இரு மனைவி கள். மனைவிகளில் ஒருவர் மாடல் அழகி என்றும் மற்றவர் குடும்பத் தலைவி என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனைவிகளைப் பார்த் துக்கொள்வது பெரும் சிரமம் என்றும் அவர்களுக்காகவே அவர் பணம் அச்சிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  
போலிப் பணம் அச்சிடப்படுவ தாக ரகசியத் தகவல் கிடைத்த தைத் தொடர்ந்து, பொரிவ்லியில் உள்ள எஸ்.வி.ரோடு பகுதியில் பணம் அச்சிடுபவர்களைப் பிடிக்க போலிசார் வலை விரித்தனர்.
போலிஸ் விரித்த வலையில்  தேவ்குமார் ராம் ரத்தன் பட்டேல், 37,  என்பவர் சிக்கினார். 
இவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு தோல்பையுடன் அங்கிருந்து நகர முயன்றபோது போலிசார்  அவரைக் கைது செய்தனர். 
அவரது பையைச் சோதனை செய்தபோது, அந்தப் பையில் போலிப் பணம் கத்தை கத்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
போலிசார் கூறியபோது, “பட் டேல் தொலைக்காட்சி தொடர் களுக்கு கதை எழுதுபவர். அவர் எழுதிய தொடர்களுள் ‘ஈஸ்வர் ஏக் அப்ராத்’ என்ற தொடரும் ஒன்று. 
“அவருடைய நாலாஸ்போரா இல்லத்தில் சோதனை நடத்திய போது, ரூ.5 லட்சம் போலிப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் ரூ.2,000,     ரூ.500, ரூ.200 நோட்டுகளாக இருந் தன,” என்றனர்.