கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது 

திருப்பதி: திருமலையில் கடத்தப் பட்ட குழந்தையை திருப்பதி போலிசார் 24 மணிநேரத்தில் மீட்டனர். குழந்தையைக் கடத்திய பெண்ணும் கைது செய்யப்பட்டார். 
பெற்றோருடன் இரவில் தூங் கிக்கொண்டிருந்த மூன்று மாத ஆண்குழந்தை வீராவைக் காலை யில் எழுந்து பார்த்தபோது  காண வில்லை. 
பதறித் துடித்த பெற்றோர் அங்குமிங்கும் ஓடோடித் தேடினர். பலரிடமும் விசாரித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் திரு மலை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். 
போலிசார், அங்கு பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு புகைப் படக் கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது குழந்தையை ஒரு பெண் கடத்திச் செல்வது தெரியவந்தது. 
இதுகுறித்து திருமலை போலி சார், திருப்பதி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
“குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண், திருமலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்த துளசி என்று அடை யாளம் தெரிந்தது. 
“சித்தூர் மாவட்டம், கார்வேட்டி நகரைச் சேர்ந்த துளசியின் கைபேசி எண்ணை ஆய்வு செய்து, திருப்பதி மங்களம் குடியிருப்புப் பகுதிக்கு விரைந்த காவல்துறை யினர், அப்பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டனர். 
துளசி கூறுகையில், “எனக் கும் கார்வேட்டி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமானது. எங்களுக்குத் தலைப்பிரசவத்தின் போது பிறந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது. அடுத்து 2வதாக பிறந்த குழந்தையும் இறந்துவிட் டது. இதனால் என்  கணவர் என் னைப் பிரிந்து சென்றுவிட்டார்.
“என்னைத் தனிமை வாட்டவே திருமலையில் உள்ள உணவகத் தில் வேலை பார்த்தபடி இரவில் ஏதேனும் ஒரு குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டேன்,” என்றார்.