அடுக்குமாடிக் கட்டடம் சரிந்ததில் இருவர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தின் தார்வாட் பகுதியில் கட்டு மானப் பணி நடைபெற்று வரும் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்ததில் இருவர் பலியாகினர். அத்துடன் கட்டட இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டிருப்பர் என்றும் அஞ்சப் படுகிறது. 
தார்வாட் நகர் கட்டட விபத்து பற்றி அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, “இடிபாடுகளில் சிக் கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள் ளேன்,” என டுவிட்டரில் பதி விட்டுள்ளார். 
காயங்களுடன் மீட்கப்பட்டவர் கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இந்தக் கட்டடம் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப் பட்டதாகவும் அஸ்திவாரம் வலு வின்றி இருந்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன் இந்தக் கட்டடம் கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியின் உறவினர்க ளுக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.