தேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்

இந்திய நாடாளுமன்றத் தேர்த லுக்கு இன்னும் ஒருசில வாரங் களே எஞ்சியுள்ள நிலையில் சமூக ஊடகங்களிலும் இணை யம் வழியாகவும் பொய்ப் பிரசாரங் கள் பரப்பப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம்  தீவிர நட வடிக்கைகளில் இறங்கி உள்ளது.
இதன் தொடர்பில் ‘இந்திய இணையம், கைபேசிச் சங்க’த் தின் பிரதிநிதிகளுடன் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இணையச் செய்திகளை வழங் கும் நிறுவனங்களோடு ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர், கூகல், ஷேர்சாட், டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தில் பங்கேற்றனர்.
தேர்தல் பிரசாரம் நடை பெறும்போது சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தப்படு வதைத் தடுப்பது, பொய்ச் செய்தி கள் வெளியாகாமல் நடவடிக்கை எடுப்பது, இணைய விளம்பரங் களுக்காக அரசியல் கட்சிகள் செலவிடுவதில் வெளிப் படைத்தன்மையைப் கடைப்பிடித் தல் போன்ற அம்சங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்