அகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா

இந்தியாவின் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி பங்கேற்றனர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது. இருந்தாலும் 12வது மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமான உத்திரம் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பானது. இந்தத் திருநாளில்தான் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தெய்வானை திருமணம், மகாலட்சுமி விரதம் இருந்து மகாவிஷ்ணு திருமார்பில் இடம்பிடித்தது, பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும் வரம் பெற்றது, ராமபிரான்-சீதாதேவியின் திருமணம், பரதன்-மாண்டவியின் திருமணம், லட்சுமணன்-ஊர்மிளை திருமணம் உள்ளிட்ட பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்