இந்திய அளவில் கூர்ந்து கவ னிக்கப்படும் தொகுதியாக மாறி யுள்ளது உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதி. இங்கு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தி ருக்கும் காங்கிரஸ் கட்சித் தலை வர் ராகுல் காந்தியை எதிர்த்து 2014ல் போட்டியிட்ட அதே ஸ்மி ருதி இரானி இம்முறையும் நிறுத் தப்பட்டுள்ளார். இத்தேர்தலில் எப்படியாவது ராகுலைத் தோற் கடித்து அமேதியில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்ற வேட்கை யோடு பாஜகவினர் பல மாதங் களுக்கு முன்னரே வேலைபார்க்கத் தொடங்கிவிட்டனர். இப்போது அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ராகுலின் செல்வாக்கு முன்பைப் போல் இல்லை என்பதும் அகி லேஷ்-மாயாவதி கூட்டணி பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் என்பதும் ஸ்மிருதிக்குச் சாதக மான அம்சங்கள். 2009 மக்க ளவைத் தேர்தலில் 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றிபெற்ற ராகுல் கடந்த 2014 தேர்தலில் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றார். எனவே இம்முறை அவரை எளி தில் வீழ்த்திவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு.
சரிந்த ராகுல் செல்வாக்கு ஸ்மிருதிக்கு சாதகம்
1 mins read

