வேகமாக வளரும் மிகப்பெரிய  நாடுகள் பட்டியலில் இந்தியா

வா‌ஷிங்டன்: உலக அளவில் வேக மாக வளரும் மிகப்பெரிய பொருளி யல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று அனைத் துலக நாணய நிதியமான ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.  
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு முக்கியமான சீர்திருத்தங் களை இந்தியா, மேற்கொண்டுள்ள தாகவும் இன்னும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  
ஐ.எம்.எப் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது, அவரிடம், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பப் பட்டது. 
இக்கேள்விக்குப் பதில் அளித்த ரைஸ் மேற்கண்டவாறு கூறினார். மேலும், “உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளியல் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார் கெர்ரி ரைஸ். 
“கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி சராசரி 7% என்ற அளவுக்கு உள்ளது. 
“பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
“நீடித்த மற்றும் உயர் வளர்ச்சிக் குச் சீர்திருத்தங்கள் இன்னும் அவசியம் என நாங்கள் கருதுகி றோம். 
“இந்தியாவின் பொருளியல் பற்றிய தகவல்கள் விரைவில்  வெளியிடப்படவிருக்கும், உலக பொருளியல் பார்வை ஆய்வறிக் கையில், அனைத்துலக நாணய நிதியத்தால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக வங்கியின் கூட்டத்தில் வெளியிடப்படும்,” என்றார். தற்போது ஐ.எம்.எப் அமைப்பின் தலைமைப் பொருளி யல் நிபுணராக இருக்கும் இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் தலைமையில் வெளியிடப்படும் முதல் அறிக்கையாக இது இருக் கும் என்பது குறிப்பிடத்தக்கது.