ஆந்திரா: அரக்கு தொகுதியில் தந்தை - மகள் போட்டி

ஆந்திரா: அரக்கு தொகுதியில் தந்தை - மகள் போட்டி

2 mins read

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநி லத்தின் விசாகப்பட்டினம் மாவட் டத்தின் அரக்கு தொகுதி மக் களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இங்கு மத்திய அமைச்சராக இருந்த தந்தையை எதிர்த்து மகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். மத்தியில் முந்தைய காங்கிரஸ் அரசில் மலைவாழ்ப் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சராக இருந் தவர் கிஷோர் சந்திர தேவ் . சென்னை கிறிஸ்துவக் கல் லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலை வர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கி யமானார். அவருக்கு அரக்குத் தொகுதி யில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கி உள் ளார். அந்தத் தொகுதியில் கிஷோர் சந்திர தேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி, அவரது மகள் சுருதிதேவியை களமிறக்கியுள்ளது. ஆக தந்தை கிஷோர் சந்திர தேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிடுகிறார். அதனால் தேர் தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறு வார்கள் என்ற கேள்வியை எழுப்ப ஒரு வழி இல்லை. ஏனென்றால் அங்கு ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தியிருக்கிறது. எனவே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதேபோன்று விஜய நகரம் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அசோக் கஜபதி ராஜூ போட்டியிடுகிறார். விஜய நகரம் சட்டமன்றத் தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளராக அவரது மகள் ஆதித்தி களத்தில் குதித்திருக் கிறார். இதுவும் மக்களால் பர பரப்பாக பேசப்படுகிறது.