இயந்திரக் கோளாறால் ‘ஸ்பைஸ் ஜெட்’ சென்னையில் தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து 152 பயணிகளுடன் டெல்லி சென்ற ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் விமான விபத்துத் தவிர்க்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.