பல நாட்கள் கடந்தும் பலர் உயிருடன் மீட்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் ஐந்து மாடி வணிக வளாகக் கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீ ரென்று இடிந்து விழுந்தது. 
கடைகள், கணினி பயிற்சி மையம் ஆகியன அமைந்துள்ள அக்கட்டடத்தில் இரண்டாவது மாடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது திடீரென ஐந்து மாடியும் இடிந்து விழுந்தன. இடி பாடுகளுக்குள் சிக்கி மாண்டோ ரின் எண்ணிக்கை 12ஆக இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை இரு சடலங்களும் நேற்று ஒரு சடலமும் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித் தது. 
ஐந்து நாட்களாகிவிட்டபோதி லும் உயிருடன் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 56 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 
மேலும் பலர் உயிருடன் இருக் கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகின்றன. 
(படத்தில்) வெள்ளிக்கிழமை ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப் பட்டார். படம்: இபிஏ
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்