அய்யாக்கண்ணுவிடம் இறங்கிவரும் பாஜக

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 111 விவசாயிகள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று நேற்று பாஜக தலைவர்களுள் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திரு பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சுவாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைப்பதியில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர் களிடம் பேசியபோது இந்த வேண்டுகோளை விடுத்தார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங் களை இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு முன்னெடுத்தும் அவர்களை பிரதமரோ அல்லது வேறு அதிகாரிகளோ கண்டுகொள்ள வில்லை.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில்கூட விவசாயக் கடன்கள் தள்ளுபடி விவகாரம் பாஜகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசா யக் கடன்கள் தள்ளுபடி செய்யப் படும் என அக்கட்சி குறிப்பிட் டுள்ளது.
இவ்வேளையில் திரு மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் போட்டியிட இருப்பதாக செய்தி கள் வெளியாகின.
இதன் தொடர்பில் முன்னாள் அமைச்சர் என். நேருவை சந்தித்து ஆலோசனை பெற்ற திரு அய்யாக்கண்ணுவிடம், வேற்று மாநிலம் என்பதால் பாதுகாப்பாக இருக்கும்படி திரு நேரு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து அதிகாரிகள் தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் விவரம் பற்றிக் கேட்டதாக திரு அய்யாக்கண்ணு விகடன் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
"எங்களது வாழ்வாதாரத்துக் காக நாங்கள் போராடியபோது வராத அதிகாரிகள், வாரணாசி தொகுதியில் நாங்கள் போட்டி யிடப்போவதை அறிந்து எங் களது கோரிக்கையைக் கேட்க முன்வந்துள்ளனர்," என்றார் திரு அய்யாக்கண்ணு.
விவசாயக் கடன் தள்ளுபடி, 60 வயதைக் கடந்த விவசாயி களுக்கு மாதாந்திர ஓய்வூதிய மாக ரூ.5,000 வழங்குதல், விளைந்த பொருட்களை விவ சாயிகள் நல்ல விலையில் விற்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தல், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய் யாமல் இருத்தல், நதிகள் இணைப்பு போன்ற தங்களது கோரிக்கையை அவர் அதி காரிகளிடம் முன்வைத்துள்ள தாகக் கூறப்பட்டது.
இவற்றை பிரதமரின் பார்வைக்குக் கொண்டுசெல் வதாக அதிகாரிகள் குறிப்பிட்ட தாகச் சொன்ன திரு அய்யாக்கண்ணு, எங்களது கோரிக்கைகளை நிறைவேற் றினால், பிரதமருக்கு எதிராக தேர்தல் களம் காணும் முடிவை மாற்றிக்கொள்வோம்," என்று சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!