நீதிமன்ற உத்தரவால் கலங்கி நிற்கும் சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமா ராவ் பற்றிய திரைப்படத்தை திரையிடுவதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கமுடியாது. அதை தாராளமாக வெளியிட லாம் என்று ஆந்திர உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வரும் 28ஆம் தேதி திரையிடப்பட உள்ள இப்படத் தின் காரணமாக ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தற்போது ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ல் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. 
இந்நிலையில் அந்தப் படத் தால் தங்களது வெற்றி வாய்ப்பு கள் பாதிக்கப்படக் கூடும் என்ற பயத்தினால்  படத்தை வெளி யிடக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. 
அந்த வழக்கை நேற்று விசா ரித்த உயர் நீதிமன்றம் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. 
ஆந்திர முன்னாள் முதல் வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டிஆர் என்று அழைக்கப்படும் என்.டி.ராமா ராவின் வாழ்க்கை தொடர்பான சினிமாவை பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘லட்சுமியின் என்டிஆர்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத் துள்ளார். 
இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டிருந்தது. 
அதில் “துரோகம் செய்து விட்டனர், முதுகில் குத்திவிட்ட னர்,” என என்டிஆர் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன. அதையடுத்து இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தற்போது தேர்தல் நடக்க உள்ளதால் இப்படத்தை வெளி யிடுவதற்குத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஆனால், தடைவிதிக்க ஆந்திர நீதிமன்றம் மறுத்துவிட்டது.