சுடச் சுடச் செய்திகள்

‘நான் தமிழனாக இருப்பினும் இதயத்தில் அரியானாக்காரன்’

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் கட்சி அலுவலகங்களில் காத்துக்கிடந்து வருகின்றனர். 
டெல்லியில் உள்ள பாஜக அலு வலகத்திற்கு வந்திருந்த திண்டுக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர்,  அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அங்கு காத்துக்கிடந்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதி காரியான காமராஜா (படம்), கடந்த 29 ஆண்டுகளாக அரியானாவில் சிர்சா, ரோதக் உள்ளிட்ட பல இடங்களிலும் பணியாற்றிய அனு பவம் உள்ளவர். 
ஓய்வுபெற்றவுடன் சொந்த ஊர் திரும்பியவர் தற்போது மறுபடியும் அரியானாவிற்கு வந்துள்ளார். 
ஒரு தமிழர் அரியானாவில் போட்டியிடுவதா? என்ற கேள் விக்கு, “நான் தமிழனாக இருந் தாலும் உள்ளத்தில் அரியானாக் காரன்; இந்த மக்களுக்காகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்பியாக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்,” என்கிறார்.
இவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது அரியானா மக்கள் பலரிடமும் பாராட்டைப் பெற்றவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon