ஓயாமல் அழுத குழந்தையின் வாயை பசையால் ஒட்டிய தாய்

பாட்னா: தனது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அதன் வாயை மூடு வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அதன் உதடுகளில் பசையைப்போட்டு வாயைத் திறக்க விடாமல் ஒட்டிவிட்டுள்ளார் தாய் ஒருவர். 
குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த தாய்க்கு எதிராக இவர் எல்லாம் ஒரு தாயா? என்று கண்டனங்கள்  வலுத்து வருகின்றன.
தங்களின் குழந்தை அழுதால் சில தாய்மார்கள் கோபத்தில்  வாயில் ‘பிளாஸ்த்ரி’ வைத்து ஒட்டிவிடுவேன் என குழந்தை களை மிரட்டி பயமுறுத்துவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையின் அழுகையை நிறுத்த உதட்டின் மீது பசையை ஊற்றி ஒட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த விவகாரம் குறித்துக் குழந்தையின் தந்தை கூறியபோது, “வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகனின் வாயில் இருந்து நுரை வடிந் திருந்தது. இதுகுறித்து மனைவி யிடம் கேட்டதற்கு, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அதை சமாளிக்கமுடியாமல் பசையைப் போட்டு அவன் உதடுகளை ஒட் டியதாகக் கூறினார்,” என்றார். 
இதையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.