பாஜக துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்

லக்னோ: பாஜகவின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமாபாரதி நியமிக்கப் பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரும் மத்திய குடிநீர், வடிகால் துறை அமைச்சருமான உமாபாரதி, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை எனக் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உமா பாரதியை பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.