ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலிசார் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.  

ரயீஸ் ஹுரா, ஷாஹிட் பாத், இஷாக் லோன் ஆகியோர் அந்த பயங்கரவாதிகள் என்று போலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மெய்நிகர் ‘சிம்’ அட்டை முறையைப் பயன்படுத்தி தங்களுக்கு இடையே தொடர்புகொண்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.