ஹவ்காங் அவென்யூ 2லுள்ள புளோக் 712ன் தரைத்தளத்திற்குள்ளேயே ஓட்டுநர் ஒருவர் தனது காரை ஓட்டி அங்கு நிறுத்தியதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மழை நேரத்தில் காரோட்டுநர் தனது பயணிகளை இறக்குவதற்காக அவ்வாறு செய்ததை அருகில் இருந்த ஒருவர் தனது கைத்தொலைபேசி கேமராவில் காணொளியாகப் பதிவு செய்தார். பின்னர் அவர் அந்தக் காணொளியை 'ஸ்டாம்ப்' இணைய செய்தித் தளத்திற்கு அனுப்பினார்.
அடுக்குமாடி தரைத்தளத்திற்குள்ளே நுழைந்த கார்
1 mins read
-

