மோடியின் படங்களைக் கொண்ட விமானச் சீட்டுகளை மீட்டுக்கொண்ட ஏர்இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திய மோடி, குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோரின் படங்களைக் கொண்ட விமானச் சீட்டுகளை மீட்டுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தேசிய விமான நிறுவனம் ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் போலிஸ் படையைச் சேர்ந்த சசி காந்த், இந்த விமானச் சீட்டின் படம் ஒன்றைத் தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை விசாரிக்காத தேர்தல் ஆணையத்திற்காக பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவது ஏன் என்று அவர் அந்தப் பதிவில் எழுதினார். ஆயினும், இந்தச் சீட்டுகள் மூன்றாம் தரப்பினரின் விளம்பரங்கள் என்றும் திரு மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு நேரடியாக ஏற்பாடு செய்யவில்லை என்றும் விமான நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.
 
கடந்த வாரம், திரு மோடியின் படத்தைக் கொண்ட ரயில் சீட்டுகள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ததை அடுத்து இந்திய ரயில்வே நிறுவனம் அவற்றை மீட்க வேண்டியிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon