இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர் அறிமுகம்

இந்திய விமானப்படை அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிஃப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் அந்நாட்டை அடைந்துள்ளன.

இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா 2015ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது. 

பல்வேறு பாதுகாப்புச் சவால்களை எதிர்நோக்கும் இந்தியாவுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் கைகொடுக்கும் என்று விமானப்படைத் தளபதி மார்சல் பி.எஸ் தானோ கூறியுள்ளார்.