13 பேரின் உயிரைக் காப்பாற்றிய ‘செல்ஃபி’

இந்தியாவின் கர்நாடக மாநிலம், தார்வாட் நகரில் புதிதாகக் கட்டப் பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இம்மாதம் 19ஆம் தேதி அந்தக் கட்டட விபத்து நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில், அதனுள் 70-80 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்டட இடிபாடு களில் சிக்கியிருந்த நிலையிலும் ஆடவர் ஒருவர் தமது கைபேசியில் எடுத்து அனுப்பிய செல்ஃபி படங்கள் அவர் உட்பட 13 பேரைக் காப்பாற்ற உதவின.

சிமெண்ட், கான்கிரீட் பாளங் களுக்கு இடையே அவர்கள் சிக்கி இருப்பதும் எப்போதும் விழலாம் எனும்படியாக தலையை ஒட்டியபடி பெரிய பெரிய கான்கிரீட் பாளங்கள் தொங்கிக்கொண்டு இருப்பதையும் அப்படங்கள் காட்டுகின்றன. அவை சம்பவம் நிகழ்ந்த நாளன்றும் மறுநாளும் எடுக்கப்பட்டன.

சில நேரங்களில் ஒன்றிரண்டு பாளங்கள் தங்கள் மீது விழுந்தன என்றார் மஞ்சுநாத்யவகல் என்ற அந்த ஆடவர்.

“கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டோம். எந்தப் பக்கமும் திரும்ப முடியாத நிலை. அப் போது, எனது கைபேசியில் சமிக்ஞை இருந்ததைக் கண்ட தும் பாதுகாப்பாக இருப்பதை என் குடும்பத்தினருக்குத் தெரி விக்க  முடிவு செய்தேன். நான் சொன்னதை அவர்கள் நம்ப வில்லை. என் தாயார் அழுததை என்னால் கேட்க முடிந்தது. உடனே ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினேன். என்னுடன் சிக்கி இருந்த பெண்களிடம் இறை மந்திரத்தைத் தொடர்ந்து சொல் லும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களையும் படமெடுத்து அனுப்பினேன். அதன்பின் மீட்புப் படையினர் எங்களது இடத்தைக் கண்டுபிடிக்க ஒன்பது மணி நேரமாகியது. என்னுடன் மேலும் 12 பேர் மீட்கப்பட்டனர்,” என்று திரு மஞ்சுநாத் விவரித்தார்.

இதற்கிடையே, கட்டடம் இடிந்ததன் எதிரொலியாக ஹூப்ளி-தார்வாட் நகராட்சியைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.