பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐக்காக வேவு பார்த்ததாக டெல்லியைச் சேர்ந்த 42 வயது ஆடவரை ராஜஸ்தான் மாநில போலிசார் கைது செய்துள்ளனர். முகம்மது பர்வேஸ் என்ற அந்த ஆடவர் தேச விரோதச் செயல்களுக்காக தேசிய புல னாய்வுப் பிரிவால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, 2017 முதல் நீதிமன்றக் காவலில் இருந்த தாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை விசாரணைக்காக அவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூருக்கு அழைத்துச் செல்லப்பட் டார். அங்கு ராஜஸ்தான் போலிஸ் அவரைக் கைது செய்ததாக கூடுதல் தலைமை இயக்குநர் (உளவு) உமேஷ் மிஸ்ரா கூறினார். தன்னைப் பெண் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்ட பர்வேஸ், ராணுவ வீரர்களைத் தன் வலையில் சிக்கவைத்து, அவர்களிடம் இருந்து ரகசியத் தகவல்களைக் கறந்து, ஐஎஸ்ஐக்கு உளவு சொல்லி வந்ததாக திரு மிஸ்ரா விவரித்தார். அதற்குக் கைம்மாறாக, ஐஎஸ்ஐ அவருக்குப் பணம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. விசாரணையின்போது ஐஎஸ் ஐயுடன் தாம் தொடர்பில் இருந் ததை ஒப்புக்கொண்ட பர்வேஸ், கடந்த 18 ஆண்டுகளில் 17 முறை பாகிஸ்தான் சென்றுவந்து இருப்பதாகவும் சொன்னார். ரகசியத் தகவல்களை அனுப் புவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஐஎஸ்ஐ அவருக் குச் செய்து தந்துள்ளது என்றும் திரு மிஸ்ரா கூறினார். "டெல்லியில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் விசா நடை முறைகளை விரைந்து முடித்துத் தருவதாகக் கூறி பலரது புகைப் படங்களையும் அடையாள அட் டைகளையும் அவர் சேகரித்துள் ளார். பின்னர் அதைக் கொண்டு கைபேசிகளுக்கான 'சிம்' அட் டைகளை அவர் பெற்றுள்ளார். அந்த எண்களின்மூலம் அவர் ஐஎஸ்ஐ கைக்கூலிகளிடம் ரகசியத் தகவல்களைப் பகிர்ந் துள்ளார்," என்று திரு மிஸ்ரா விவரித்தார். ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்பட்ட அவரை நான்கு நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய ஆடவர் பிடிபட்டார்
2 mins read

