மோடி அறிவிப்பு: செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை

மோடி அறிவிப்பு: செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை

1 mins read
8fe48ef2-1c6a-497d-898c-1b2a189baa93
-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கியதோர் அறிவிப்பை வெளியிட்டார். விண்வெளியில் செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கக் கூடிய 'மிஷன் சக்தி' என்னும் சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள் ளதாக அவர் தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்தார். "இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த் தும் சோதனையை அமெரிக்கா, ர‌ஷியா, சீனா ஆகிய நாடுகள் மட் டுமே செய்துள்ளன. இந்தச் சோத னையை இந்தியா 4வது நாடாக வெற்றிகரமாகச் செய்து முடித் துள்ளது. "ஏ-சாட் ஏவுகணை நம் முடைய இந்திய விண்வெளித் திட்டத்துக்கு மிகப்பெரிய வலி மையைக் கொடுக்கும். நம் முடைய இந்த ஏவுகணையையும் விண்வெளித் திட்டத்தையும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்தமாட்டோம் என அனைத்துலக சமூகத்துக்கு உறுதியளிக்கிறேன்," என்று திரு மோடி தமது அறிவிப்பில் குறிப்பிட்டார். ஒடிசா மாநிலத்தில் பாலாசோர் ஏவுகணைத் தளத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று நிமிடங்க ளில் 'மிஷன் சக்தி' சோத னையை இந்தியா நடத்தி முடித் தது. நேற்று முற்பகல் 11.16 மணிக்கு ஏ-சாட் ஏவுகணை விண்ணை நோக்கி ஏவப்பட்டது. ஏற்கெனவே செயலிழந்து பூமியின் நீள்வட்டப்பாதையில் குறைந்த தூரத்தில், அதாவது தரையிலிருந்து 300 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை கொண் டிருந்த செயற்கைக்கோள் ஒன்றை அந்த ஏவுகணை தாக்கி அழித்ததாக இந்திய தற்காப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) தரப்பில் தெரிவிக்கப் பட்டது.