காங்கிரசின் கோட்டையைக் கைப்பற்ற பாஜக வியூகம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளாகத் திகழும் அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதி களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. 
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளும் அதிக முக் கியத்துவம் வாய்ந்ததாகும். அங்கு பெறும் வெற்றி மத்தியில் ஆட்சி அமைக்க பெரிதும் உதவும்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி யில் மோடியும் அமேதியில் ராகுலும் ரேபரேலியில் சோனியாவும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ராகுலுக்கு  ஸ்மிருதி இரானி சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமேதியில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 1.07 லட்சம் வித்தியாசத்தில் வென்றார்.
அமேதியில் ராகுலை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்மிருதி. அமேதி தொகுதியை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே ராகுல் பயன்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டி வரு கிறார் ஸ்மிருதி. அமேதி மக்களுடன் ஸ்மிருதி அதிக நேரத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக செலவழித்து வருகிறார். இதனால் இம் முறை ராகுலுக்கு கடும் சவாலாக ஸ்மிருதி இரானி விளங்குவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon