இஸ்லாமாபாத்: விரைவில் நடக்க வுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தானும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவும் ஒன்றுக் கொன்று எச்சரிக்கை விடுத்துள் ளன. இந்தியா முன்பு தாக்குதல் நடத்தியதைப் போன்றே மீண்டும் தாக்குதலை நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல் வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 சிஆர்பிஎப் வீரர் களைக் கொன்றது. இச்சம்பவத்தால் பெரும் அதி ருப்தி அடைந்த இந்தியா, புல் வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசியது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. புல்வாமா விவகாரத்தால் இந் தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக அந்நாட்டின் பிரபல டான் நாளி தழில், "நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. "இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நம்மை சூழ்ந்துள்ள நெருக் கடி அப்படியேதான் இருக்கும். தேர்தலுக்கு முன்பாக இந்திய அரசாங்கம் நம்மீது தாக்குதல் நடத்தலாம். இதனை எதிர்கொள் வதற்கு அனைத்து விதங்களிலும் நாங்கள் தயாராகவே இருக்கி றோம்," என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாக்குப் பதிவு நடக்கும் நாட்களில் பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்த திட்டமிட் டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் அதிரடி தாக்குத லால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கள் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கைவரிசை காட்ட அவர்கள் முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை எச்சரித் துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் ஆறு நாடாளுமன்றத் தொகுதி களுக்கு ஐந்து கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. அனந்தநாக் தொகுதியில் ஏப்ரல் 23, குல்காம் தொகுதியில் ஏப்ரல் 29, புல்வாமா, சோபியா தொகுதிகளில் மே 6, பாரமுல்லா தொகுதியில் ஏப்ரல் 11, ஸ்ரீநகரில் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை யடுத்து பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்ரான் கான்: தேர்தலுக்குமுன் இந்தியா தாக்குதல் நடத்தலாம்
2 mins read

