மாணவன் அடித்துக் கொலை; பள்ளியிலேயே உடல் புதைப்பு

மாணவன் அடித்துக் கொலை; பள்ளியிலேயே உடல் புதைப்பு

2 mins read

கிரிக்கெட் மட்டைகளையும் 'ஸ்டம்ப்'புகளையும் கொண்டு 12 வயது மாணவர் ஒருவரை மேல் வகுப்பு மாணவர்களே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் நிகழ்ந்துள்ளது. வாசு யாதவ் என்ற அந்த மாணவர் இறந்துவிட்டதை மருத்து வர்கள் உறுதிசெய்ததை அடுத்து, அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே அவரது உடலைப் பள்ளி வளாகத் திலேயே புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கேயே தங்கிப் படிக்கும் அப்பள்ளியில் கிட்டத்தட்ட 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் தங்களுக்குத் தெரியாமல் வாசு பிஸ்கட் பாக்கெட்டைத் திருடிவிட்ட தாகக் குற்றம் சாட்டினர். அதோடு நில்லாது, வகுப்பறையிலேயே அவரை அடித்து உதைத்தனர். மயங்கி விழுந்த வாசுவை அவர்கள் அங்கேயே விட்டுச்சென் றனர். வாசு விழுந்து கிடந்ததை மாலையில் விடுதிக் காப்பாளர் கண்ட பிறகுதான் அவர் தாக்கப் பட்ட விவரம் தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக் குக் கொண்டு சென்றிருந்தால் வாசுவைக் காப்பாற்றி இருக்க லாம் எனக் கூறப்பட்டது. "மாணவர்கள் பலர் சேர்ந்து வாசுவை பலமுறை தாக்கியுள்ள னர். ஆனால், மாலையில்தான் பள்ளி நிர்வாகம் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றது. அதோடு மட்டுமின்றி, இந்தச் சம்பவம் குறித்து போலிசுக்குத் தகவல் தெரிவிக்காமல் மூடி மறைக்கவும் பள்ளி நிர்வாகம் முயன்றுள்ளது," என்று டேராடூன் போலிஸ் உயர் அதிகாரி நிவேதிதா குக்ரேட்டி தெரிவித்தார். மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலை வர் உஷா நேகி தலையிட்டிருக்கா விடில் வாசு கொல்லப்பட்ட விவரம் வெளியில் தெரியாமலேயே போய் இருக்கக்கூடும். வாசுவின் கொலையை மறைக்க எல்லா முயற்சிகளும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.