முதல் குழந்தைக்குப் பின் ஒரே மாதத்தில் இரட்டைக் குழந்தை

முதல் குழந்தைக்குப் பின் ஒரே மாதத்தில் இரட்டைக் குழந்தை

1 mins read

பங்ளாதேஷ் பெண்மணி ஒருவர் தமது முதல் குழந்தையை ஈன்றெடுத்து 26 நாட்களுக்குப் பிறகு இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்து இருப்பது மருத்து வர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. திருமதி ஆரிஃபா சுல்தானா, 20, என்ற அந்தப் பெண் கடந்த பிப்ரவரியில் சுகப் பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆயினும், அவரது வயிற்றினுள் இன்னொரு கருப்பையினுள் மேலும் இரு குழந்தைகள் வளர்ந் ததை மருத்துவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். "தாம் இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்துகொண்டிருப்பதை அந்தத் தாயே உணரவில்லை. முதல் குழந்தை பிறந்து 26 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பனிக்குடம் உடைந்ததும் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்," எனத் தெரிவித்தார் மகப்பேறு மருத்துவரான டாக்டர் ‌ஷீலா போடர். இம்மாதம் 22ஆம் தேதி திருமதி ஆரிஃபா அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் ஈன்று எடுத்தார். ஆரோக்கியமாக இருக்கும் மூன்று குழந்தைகளுடன் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார், தென்மேற்கு பங்ளாதே‌ஷில் ஜெசூர் மாவட்டத்தில் வசித்து வரும் திருமதி ஆரிஃபா. ஜெசூர் அரசு மருத்துவ மனையின் தலைமை மருத்து வரான டாக்டர் திலீப் ராய் கூறு கையில், "முப்பதாண்டு காலத்திற் கும் மேற்பட்ட எனது மருத்துவ வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை இதற்குமுன் கண்டது இல்லை," என்றார்.