உலகத் தரநிலைகளை வகுப்பதில் 'எஃப்ஏடிஎஃப்' எனப்படும் நிதியியல் நடவடிக்கை செயற்குழு முக்கியமான பங்கினை ஆற்றுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தரச் செயலாளர் சையது அக்பருடின் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசாங்கம் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் நிதி அளித்து வந்திருக்கலாம் என்பதை 'எஃப்ஏடிஎஃப்' விசாரித்து வருகிறது. மறுஆய்வுக்கு அடுத்து பாகிஸ்தான் மீது புதிய வர்த்தகத் தடைகள் அறிமுகம் செய்யப்படலாம்.
பயங்கரவாதிகள் தங்களது தொடர் செயல்பாட்டுக்கு நிதி வளங்களை நம்பியிருப்பதால் அவர்களது முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் 'எஃப்ஏடிஎஃப்' மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக திரு அக்பருடின் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவளிப்பதைக் குற்றமாக்கும் கட்டமைப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிறுவியிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் அவர் கூறினார்.

