இந்தியாவிலுள்ள பல கட்சிகளில் வாரிசு அரசியல் தொடர்வதாக இந்தியப் பிரதமர் மோடி குறைகூறினார். மற்ற குடும்ப அரசியலால் தமக்குப் பிரச்சினை இல்லை என்றாலும் அது நாட்டுக்குப் பெரிய ஆபத்து என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.
தனியார் நிறுவனம் போல் ஓர் அரசியல் கட்சி செயல்பட்டால் அதில் யாரும் தலைவராக இருக்க முடியாது என்று திரு மோடி தெரிவித்தார். இதனை ஆராய்ந்து விளக்குவது ஊடகங்களின் கடமை என்றும் அவர் சொன்னார்.
மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வெளித் தாக்குதல் தாம் இரவில் கண்விழித்திருந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்ததாகத் திரு மோடி தெரிவித்தார். எனவே, தமது நாட்டுப்பற்றை எவரும் சந்தேகிக்க முடியாது என்று அவர் கூறினார்.

