போலிசுக்கு மது விருந்தளித்து தப்பிய கைதி

போலிசுக்கு மது விருந்தளித்து தப்பிய கைதி

2 mins read
Google News Preferred Icon

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உடன் வந்த போலிசாருக்கு மது விருந்து அளித்து, அவர்கள் போதையில் இருந்தபோது கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது. பதன் சிங், 50, என்ற அந்த ஆடவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலை யில், நேற்று முன்தினம் காஸியா பாத் நீதிமன்றத்தில் அவரை முன் னிலைப்படுத்த போலிசார் அவரை அழைத்துச் சென்றனர். வழியில் தம்முடைய நண்பர்கள் மது விருந்திற்கு ஏற்பாடு செய்து இருப்பதாகவும் அங்கு சென்று மது அருந்தியபின் நீதிமன்றத் திற்குச் செல்லலாம் என்றும் பதன் சிங் தம்முடன் வந்த போலிசாரிடம் கூறியுள்ளார். அவர்களும் அதற்கு இணங்கினர். இதையடுத்து, போதை தலைக் கேறும் அளவிற்கு அவர்களுக்கு மது ஊற்றிக்கொடுத்தார் பதன் சிங். சிறிது நேரத்தில் அவர்கள் தன்னிலை மறந்ததும் பதன் சிங் அங்கிருந்து தப்பியோடினார். இந்தச் சம்பவம் தொடர்பில் போலிஸ் ஆய்வாளர் ஒருவர் உட்பட போலிசார் எழுவரைத் தடுத்து வைத்துள்ளதாக மீரட் நகரின் போலிஸ் கண்காணிப்பா ளர் தெரிவித்தார். தப்பிச் சென்ற பதன் சிங்கை விரைவில் கண்டு பிடித்து, கைது செய்துவிடுவோம் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார். சம்பவம் குறித்து குற்றப் பிரிவு அதிகாரி சஞ்சய் மிஸ்ரா விசா ரித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அதன்பின் சம்பந்தப்பட்ட போலிசார் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபரூக்காபாத் நகர போலிஸ் கண்காணிப்பாளர் கூறினார். மீரட் போலிசாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பதன் சிங், அந்நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும், சக கைதிகளால் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிய வந்ததை அடுத்து, ஒரு மாதத் திற்குப் பின் அவர் ஃபரூக்காபாத் சிறைக்கு மாற்றப்பட்டார்.